கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆர்.ஆர்.குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக மற்றும் பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.
இவ்விழாவை முன்னிட்டு கடந்த சில நாட்களாக யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. முதல் கால யாக பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி, லட்சுமி பூஜை, கோ பூஜை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்றன. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்களை மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஏராளமான பக்தர்கள் ஓம் சக்தி அம்மன் திருவடி சரணம் என பக்தி கோஷங்கள் எழுப்பி அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.
இந்த கும்பாபிஷேக விழாவில் ஆர்.ஆர்.குப்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டதுடன், கோவில் வளாகம் முழுவதும் வண்ண மின் விளக்குகள் மற்றும் மலர் அலங்காரங்களால் விழாக்கோலம் பூண்டிருந்தது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
D.செல்வம்
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர்
தமிழக குரல்.

No comments:
Post a Comment